வியாழன், 22 ஜனவரி, 2015

CP's account slip

For your individual
CPS account slip.
http://218.248.44.123/auto_cps/public
(Or)
http:/218.248.44.123/auto_cps/public/index.php
Login id   : your cps no.
Password: your DOB

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம்


இந்தியா 68-வது சுதந்திர நாளை கொண்டாடும் இந்த நேரத்தில், சுதந்திரத்துக்கான அடையாளங்கள் நாடெங்கும் எவ்வாறெல்லாம் பரவிக்கிடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த பின்கோடு எண் முறை, மொழி வேறுபாடு இன்றி தொலைதொடர்பை செழுமைப்படுத்தி வருகிறது. 1972 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய தபால்துறை அஞ்சல் குறிப்பீட்டு எண்ணை (பின்கோடு எண்) அறிமுகம் செய்தது. ஒரு கடிதம், நாட்டின் எந்த மூலையாக இருந்தாலும் சரியாக அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு எளிதில் கொண்டுசேர்க்கும் வகையில் இந்த அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறைக்கு வந்தது. 68-வது சுதந்திர தினத்தன்று, தனது 42-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது இந்த பின்கோடு எண்.

இதுகுறித்து கோவையில் உள்ள தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சலக அதிகாரி நா.ஹரிஹரன் கூறியதாவது: ‘‘பின்கோடு எண் குறிப்பிடப்பட்ட கடிதம், அந்த எண்ணின் அடிப்படையில் அதற்கான தபால்நிலைய வட்டாரத்தை எளிதில் சென்றடையும் வகையில் நாட்டை 8 பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ஆரம்ப எண்கள் கொடுத்து, அனைத்து தபால் பட்டுவாடா அலுவலகங்களுக்கும் வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்பட்டன.

முதல் எண் தபால்நிலையம்

6 இலக்கங்கள் கொண்ட பின்கோடு எண்களில், முதல் எண்கள் மாநில வாரியாகவும், 2 மற்றும் 3-வது எண்கள் அஞ்சல் பிரிப்பகத்தின் துணை மண்டலங்கள், மாவட்டங்கள் அடிப்படையிலும் அமைகின்றன. இறுதி 3 எண்கள் தபால் பட்டுவாடா நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

பின்கோடு வரிசையில் இந்தியாவில் உள்ள முதலாவது எண் கொண்ட தபால்நிலையம் புதுடெல்லி தபால்நிலையம். இதன் எண் 110001. பின்கோடு எண், தபால் சேவைக்கு மட்டுமில்லாமல் பல வகைகளில் பயன்படுத்தப்படுவதால் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது’’ என்றார்.

இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. மாநில எல்லை, மதம், மொழி அனைத்தையும் கடந்து, முகவரி எந்த மொழியில் இருந்தாலும், புரிந்தாலும் புரியாவிட்டாலும் பின்கோடு எண்கள் அதனை சரியாகக் கொண்டு சேர்க்கும். எனவே இது இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஓர் அடையாளமாகவே இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது.அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் ——by @UC Browser

அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் ——by @UC Browser


உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் மனித உடலின் எதிர்ப்புச் சக்தியை எப்படிச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அதன் செயல்பாடுகளைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த ஆய்வுக்குழுவினர் தீவிரமாக நம்புகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பதட்டத்திற்கு உள்ளாக்கிய இந்த எபோலா, முதன்முதலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த அமரசிங்கே மற்றும் பலர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

எபோலா புரோட்டீன் விபி24 என்ற ஒன்று செல்லின் எதிர்ப்புச் சக்தியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது.

“எபோலா வைரஸ் முக்கிய எதிர்ப்புச் சக்தி திரவமான இண்டெர்ஃபெரான் என்பதை கடுமையாகச் செயலிழக்கச் செய்கிறது என்பது நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிந்த விஷயம், இப்போது எபோலா எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொடிய நோய்க்கு புதிய சிகிச்சை முறைகளை வளர்த்தெடுக்க அனுகூலமான நிலை தோன்றியுள்ளது” என்று டாக்டர் அமரசிங்கே தெரிவித்துள்ளார்.

இண்டெர்ஃபெரான் என்ற அந்த திரவத்தின் எபோலா வைரஸ் எதிர்ப்புச் செய்தி அல்லது சமிக்ஞையான ஸ்டாட் 1 என்பதை எபோலா வைரஸ் தொற்று தொந்தரவு செய்கிறது. அதாவது செல் மையத்திற்கு அந்தச் சமிக்ஞை சென்றடைந்தால்தான் உடலின் இயல்பான எதிர்ப்புச் சக்தி எபோலாவை எதிர்த்துப் போராடும். ஆனால் அந்த சமிக்ஞையை எபோலா திறமையாகத் தடுத்து விடுகிறது.

சாதாரணமாக இண்டெர்ஃபெரான் என்பது ஸ்டாட் 1 என்ற அந்தச் செய்தியை செல் மையத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அது மரபணுக்களையும் நூற்றுக் கணக்கான எதிர்-வைரஸ் புரதங்களையும் செயல்பட முடுக்கி விடுகிறது.

ஆனால் விபி24 என்ற என்ற புரோட்டீன் ஸ்டாட் 1-உடன் சேரும்போது அது செல்மையத்திற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் இயல்பான வைரஸ் எதிர்ப்புச் சக்திகள் எபோலாவினால் செயலிழந்து விடுகிறது.

எபோலா விபி24 எவ்வாறு இந்த இடையூறைச் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் எபோலாவை வீழ்த்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.................

சனி, 10 மே, 2014

பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடம்

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து புதிய சாதனை படைத்தது.
தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்று புதிய சாதனை படைத்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 183 பள்ளிக்கூடங்களில் படித்த 26 ஆயிரத்து 464 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 25 ஆயிரத்து 683 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 97.05 சதவீதமாகும்.
மாணவர்கள் 12 ஆயிரத்து 810 பேர் தேர்வு எழுதியதில் 12 ஆயிரத்து 355 பேர் வெற்றி பெற்றனர். இது 96.448 சதவீதம் தேர்ச்சியாகும். இதுபோல் 13 ஆயிரத்து 654 மாணவிகள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.612 சதவீதம் தேர்ச்சியாகும்.
ஆக ஈரோடு மாவட்டத்தில் 97.05 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்து உள்ளனர். இதனால் தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் முதல் முறையாக முதலிடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் 93.35 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.28 ஆக இருந்தது.
சாதனை
இந்த ஆண்டு இதுவரை இல்லாத தேர்ச்சி விகிதத்தை பெற்று ஈரோடு கல்வி மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சியால் புதிய சாதனையை படைத்து உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்டத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு கலெக்டர் எஸ்.மதுமதி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் புதிய சாதனை படைத்து உள்ளது. மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்து சாதனை படைத்து உள்ளன. இதுபோல் இயற்பியல் பாடத்தில் 208 பேரும், வேதியியல் பாடத்தில் 113 பேரும், உயிரியல் பாடத்தில் 53 பேரும், தாவரவியல் பாடத்தில் ஒருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
புள்ளியியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 94 பேரும், கணித பாடத்தில் 316 பேரும் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்து உள்ளனர். மேலும், பொருளியல் பாடத்தில் 77 பேரும், வணிகவியல் பாடத்தில் 160 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 158 பேரும், வர்த்தக கணிதம் பாடத்தில் 40 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இவர்கள் தவிர தொழிற்கல்வி மாணவ-மாணவிகள் 2642 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.மதுமதி கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட வாரியாக....
மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-
ஈரோடு - 97.05
நாமக்கல் - 96.59
விருதுநகர் - 96.12
பெரம்பலூர் - 96.03
தூத்துக்குடி - 95.72
கன்னியாகுமரி - 95.14
கோவை - 94.89
திருநெல்வேலி - 94.37
திருச்சி - 94.36
திருப்பூர் - 94.12
சிவகங்கை - 94.06
தர்மபுரி - 93.24
ராமநாதபுரம் - 93.06
கரூர் -92.97
தேனி - 92.74
மதுரை - 92.34
சென்னை - 91.90
சேலம் - 91.53
திண்டுக்கல் - 90.91
தஞ்சாவூர் - 89.78
புதுக்கோட்டை - 89.77
புதுச்சேரி - 89.61
கிருஷ்ணகிரி - 89.37
திருவள்ளூர் - 88.23
காஞ்சீபுரம் - 87.96
நாகப்பட்டினம் - 87.95
ஊட்டி - 86.15
விழுப்புரம் - 85.18
வேலூர் - 85.17
கடலூர் - 84.18
திருவாரூர் - 83.70
அரியலூர் - 79.55
திருவண்ணாமலை- 74.4
சென்னை மாவட்டத்தில் தான் அதிக மாணவர்களாக 53 ஆயிரத்து 73 பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் தான் குறைந்த மாணவர்களாக 6,250 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

சமஸ்கிருத பாடப்பிரிவில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த ஈரோடு மாணவ-மாணவிகள்

ஈரோடு,
சமஸ்கிருத பாடப்பிரிவில் மாநில அளவில் முதல் 3 இடங்களை ஈரோடு மாணவ-மாணவிகள் பிடித்தனர்.
சமஸ்கிருத பாடப்பிரிவில்...
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சமஸ்கிருத பாடப்பிரிவுகளில் ஈரோடு மாணவ-மாணவிகள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளிக்கூட மாணவி என்.விஷ்ணுபிரியா சமஸ்கிருத பாடத்தை முதல் மொழியாக எடுத்து 1,200-க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 200
வேதியியல் -200
கணிதம் -200
கணினி அறிவியல் - 200
மொத்தம் - 1,193
மேற்கண்ட மதிப்பெண்களை மாணவி விஷ்ணுபிரியா பெற்று உள்ளார்.
கணினி என்ஜினீயர்
இவருடைய தந்தை நடராஜ், துடுப்பதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக உள்ளார். தாயார் பத்மாவதி, வீட்டை கவனித்து வருகிறார். மாணவி விஷ்ணுபிரியா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி விஷ்ணு பிரியா கூறியதாவது:-
நான் யு.கே.ஜி. முதல் பி.வி.பி. பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கும் பாடத்தை தினமும் படித்து முடித்து விடுவேன். தனியாக டியூசன் எதுவும் செல்லவில்லை. பள்ளிக்கூட நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் சிறந்த மதிப்பெண் பெற முடிந்தது. அதுவும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் கணினி என்ஜினீயர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே கணினி அறிவியல் எடுத்து படிக்க உள்ளேன்.
இவ்வாறு மாணவி விஷ்ணுபிரியா கூறினார்.
மாணவி ஷாலினி
அதே பள்ளிக்கூட மாணவி ஷாலினி 1200-க்கு 1192 மதிப்பெண்கள் பெற்றார். இவரும் முதல் மொழியாக சமஸ்கிருதம் எடுத்து படித்ததால், மாநில அளவில் பிறமொழி பாடப்பிரிவில் 2-ம் இடத்தை பிடித்தார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 196
பொருளியல் -198
வணிகவியல் - 199
கணக்குபதிவியல் - 200
வர்த்தக கணிதம் - 200
மொத்தம் - 1,192
மேற்கண்டவாறு மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
கோடை விடுமுறைக்காக சென்னை போரூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த மாணவி மற்றும் பெற்றோர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஷாலினி கூறுகையில் : நான் சேலத்தை சேர்ந்தவள் எனது தந்தை தியாகராஜன் துணி வியாபாரம் செய்து வருகிறார். நான் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்றேன். பிளஸ்-2 தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்காக எனது பெற்றோருடன் போரூரில் உள்ள எனது தாத்தா வீட்டிற்கு வந்தேன். நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது அதில் நான் 1192 மதிப்பெண்கள் எடுத்து தோச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்துள்ளேன் என்று எனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் எல்லாம் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதற்கு நன்றி, சமஸ்கிருதத்தை பாட மொழியாக எடுத்து படித்தேன். நான் பள்ளியில் நடந்த தேர்வுகளில் எல்லாம் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்¢கள் என்னை திட்டாமல் உற்சாகப்படுத்துவார்கள். அதுவே எனக்கு பக்க பலமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் டெல்லி சென்று படிக்க வேண்டும் என்று அந்த மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து சமஸ்கிருத மொழி பாடத்தை எடுத்து படித்து மாநிலத்தில் 2வது இடம் பிடித்த மாணவி ஷாலினிக்கு அவரது பெற்றோர்கள், உறவினர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர் பொன்சங்கர்
பிறமொழி பாடப்பிரிவில் சமஸ்கிருதம் பாடத்தை முதல் மொழியாக எடுத்து படித்த ஈரோடு பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மாணவர் கே.பொன்சங்கர் 1,200-க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 200
வேதியியல் - 198
உயிரியல் - 200
கணிதம் - 200
மொத்தம் -1,191
மேற்கண்டவாறு மாணவர் பொன்சங்கர் மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
மாணவர் கே.பொன்சங்கர், நசியனூர் அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை அதே பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் காந்திமதி வீட்டை கவனித்து வருகிறார்.
ராணுவத்தில் டாக்டர்
சிறந்த மதிப்பெண்கள் பெற்றது குறித்து மாணவர் பொன்சங்கர் கூறியதாவது:-
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் சாதிக்க முடியும். நானும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். இதற்கு எனது பள்ளிக்கூட நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் உதவியாக இருந்தனர்.
நான் ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக புனே ராணுவ மருத்துவ கல்லூரியில் முதல் கட்ட நுழைவுத்தேர்வு எழுதி இருக்கிறேன். அதிலும் வெற்றி பெற்று ராணுவத்தில் சேவை செய்வேன். பின்னர் பொதுமக்களுக்கு சேவை செய்வேன்.
இவ்வாறு மாணவர் பொன் சங்கர் கூறினார்.
இவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், பள்ளிக்கூட தாளாளர் காசியண்ணன், முதல்வர் முருகசாமி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகன் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக பேட்டி

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடத்தை ஆட்டோ டிரைவரின் மகன் நவீன்குமார் பிடித்தார். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
ஆட்டோ டிரைவர் மகன்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் 1,200-க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவர் எஸ்.நவீன்குமார் முதல் இடம் பிடித்தார்.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த இவருடைய தந்தை சண்முகானந்தம். ஈரோடு பஸ்நிலையத்தில் ஆட்டோ டிரைவராக உள்ளார். தாயார் மஞ்சு, ஈரோட்டில் தனியார் பார்சல் அலுவலகத்தில் தினக்கூலியாக உள்ளார். ஒரே தங்கை யுவஸ்ரீ, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார்.
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்றது குறித்து மாணவர் எஸ்.நவீன்குமார் கூறியதாவது:-
ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்
மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். ஆனால் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறேன். இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எனது இந்த வெற்றிக்கு எங்கள் பள்ளிக்கூட தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் காந்திமதி மற்றும் வகுப்பாசிரியர்கள் தான் காரணம். எனக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமை மிகவும் பிடிக்கும். எனவே அவரைப்போல விஞ்ஞானி ஆகும் ஆசை உள்ளது. செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பும் விஞ்ஞானியாக நான் மாற வேண்டும். எனவே ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறேன். சென்னை எம்.ஐ.டி.யில் பி.டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்க உள்ளேன். இதையும் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்.
இவ்வாறு மாணவர் எஸ்.நவீன்குமார் கூறினார்.
இவருடைய தாயார் மஞ்சு கூறும்போது, ‘எங்கள் குடும்பத்திலேயே 10-ம் வகுப்புக்கு மேல் படித்தது எனது மகன்தான். அவன் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து அவனுடைய விருப்பப்படி படிக்க வைப்போம்’ என்றார்.
சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும்...
ஈரோடு மாவட்ட அளவில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,188 மதிப்பெண்கள் பெற்று திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 2-ம் இடத்தை பிடித்தார். இவருடைய தந்தை சி.கந்தசாமி, பெருந்துறை சிப்காட் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக உள்ளார். தாயார் கே.சரோஜா, வீட்டை கவனித்து வருகிறார். ஒரே தங்கை ஹர்ஷினி ஸ்ரீ, 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பிரீத்தி ஸ்ரீ இந்த வெற்றி குறித்து கூறியதாவது:-
நான் மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று படித்தேன். ஆனால் கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் மாவட்ட அளவில் 2-ம் இடம் கிடைத்து உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கணினி என்ஜினீயரிங் படித்து சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி சுவாதி
1,200-க்கு 1,187 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை பிடித்த ஈரோடு இந்து கல்வி நிலைய பள்ளிக்கூட மாணவி எல்.சுவாதி, வீரப்பன்சத்தரம் பெரியவலசு பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை லோகநாதன், ஜவுளித்தொழில் செய்து வருகிறார். தாயார் ஜெகதாம்பாள் வீட்டை கவனித்து வருகிறார்.
மாணவி சுவாதி கூறும்போது, ‘என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என்ஜினீயரிங்கில் என்ன பிரிவு எடுப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. எனது இந்த வெற்றிக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்தான் காரணம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
கலெக்டர் பாராட்டு
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரன், இந்து பள்ளிக்கூட துணைத்தலைவர் அருண்குமார், பள்ளிக்கூட முதல்வர் ஏ.காந்திமதி, பி.வி.பி பள்ளிக்கூட தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அருணா ராமகிருஷ்ணன், முதல்வர் என்.எஸ்.கார்த்திகேயணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவர் எஸ்.நவீன்குமார் முதலிடம் பிடித்து சாதனை 2-வது இடம் மாணவி கே.எஸ்.பிரீத்திஸ்ரீ, 3-வது இடம் எல்.சுவாதி

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவர் எஸ்.நவீன்குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பி.வி.பி. பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 2-வது இடத்தையும், ஈரோடு இந்து கல்வி நிலையம் மாணவி எல்.சுவாதி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
முதல் 3 இடங்கள்
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 26 ஆயிரத்து 464 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 683 பேர் வெற்றி பெற்றனர். இது 97.05 சதவீதமாகும்.
இதில் 1200-க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்ற ஈரோடு மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவர் எஸ்.நவீன்குமார் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தார்.
திண்டல் பாரதி வித்யா பவன் (பி.வி.பி.) பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 1200-க்கு 1188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும், மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவி எல்.சுவாதி மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
மதிப்பெண்கள்
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ்.நவீன்குமார் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ் -196
ஆங்கிலம்- 195
இயற்பியல்- 199
வேதியியல்- 200
கணிதம்- 200
கணினி அறிவியல்- 199
மொத்தம்- 1,189
2-வது இடம் பிடித்த மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்- 197
ஆங்கிலம்- 196
இயற்பியல்- 200
வேதியியல்- 199
கணிதம்- 198
கணினி அறிவியல்- 198
மொத்தம்- 1,188
3-வது இடம் பிடித்த மாணவி எல்.சுவாதி பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்- 195
ஆங்கிலம்-192
இயற்பியல்- 200
வேதியியல்-200
கணிதம்- 200
கணினி அறிவியல்-200
மொத்தம்- 1,187
200-க்கு 200
முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர் நவீன்குமார் வேதியியல் மற்றும் கணித பாடத்தில் 200-க்கு 200 பெற்று உள்ளார். 2-ம் இடம் பிடித்த மாணவி பிரீத்திஸ்ரீ இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 பெற்று உள்ளார். ஆனால் 3-ம் இடம் பிடித்து உள்ள மாணவி எல்.சுவாதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என்று 4 முக்கிய பாடங்களிலும் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு

ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கும், மாநில அளவில் முதலிடத்தை பெற்றதற்கும், ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மாநில அளவில் முதலிடம்
ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள் இருந்தாலும் பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்வுகளில் முதல் இடம் பிடிப்பது என்பது எட்டாத கனியாகவே இருந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரிகளான குப்புசாமி, பொன்.குமார், வை.குமார் ஆகியோர் ஈரோடு மாவட்ட கல்வித்துறையில் செய்த மாற்றங்களால் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வந்தது. கடந்த 2012–ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதன் முதலாக மாநில அளவில் அதிக தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அப்போதைய ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஸ்ரீதேவி தீவிர நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் பயனாக கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் அரசு பள்ளிக்கூட தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்ற பி.அய்யண்ணனின் கடுமையான முயற்சியால், ஈரோடு மாவட்டம் இந்த ஆண்டு நீண்ட கால கனவாக முதல் இடம் என்ற அந்தஸ்தை பெற்று உள்ளது. இது கல்வியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
குறிப்பாக இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் கூறியதாவது:–
இந்த வெற்றிக்கான அனைத்து பெருமைகளும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே சாரும், நாங்கள் வழங்கிய அத்தனை வழிமுறைகளையும் தட்டாமல் அப்படியே நிறைவேற்றி, இந்த சாதனையை படைத்து உள்ளார்கள். எனவே ஆசிரியர்களுக்கு எனது பாராட்டினையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.

புதன், 9 ஏப்ரல், 2014

இப்போது வாக்காளர்கள் எஸ்எம்எஸ் மூலம் வாக்கு சாவடிகளுக்கு பற்றி தகவல் பெற தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தங்கள் வாக்கு சாவடிகளுக்கு பற்றி வாக்காளர்கள் தகவல்களை வழங்க 14 மாநிலங்களில் ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. இதன் கீழ், வாக்காளர்கள் தங்கள் பெயர்களை தேட முடியும் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அல்லது தேசிய அளவிலான வாக்காளர் பட்டியலில் வாக்கு சாவடிகள் தொடர்பான இண்டர்நெட் மூலம் தகவல் கிடைத்தது. சேவை தன்னை இலவசமாக போது, பயனர்கள் எஸ்எம்எஸ் கட்டணம் அல்லது இணைய அணுகல் கட்டணம் தாங்க வேண்டும், தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். எஸ்எம்எஸ் மூலம் சேவைகளை அணுக, வாக்காளர்கள் வார்த்தை போன்ற பெயர் அல்லது அவரது விவரங்கள் தொடர்ந்து "ECI" ஒரு முன் வடிவமைக்கப்பட்ட எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும், பிறப்பு மற்றும் பாலினம் தந்தை / கணவர், உள்ளூர், வயது அல்லது தேதி பெயர் பிரிக்கப்பட்ட முகவரிகள். சேவை அருணாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தில்லி, கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், நாகாலாந்து, பாண்டிச்சேரி, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தேர்தல் தரவு துவங்கப்பட்டு . மீதமுள்ள மாநிலங்களில் சேவை விரைவில் பரவியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 5 ஏப்ரல், 2014

16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும்

அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவித்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த தொகையை 1.1.14 அன்றைய தேதியில் இருந்து கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி, முன்தேதியிட்டு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படியின் பாக்கித்தொகை உடனடியாக பணமாக வழங்கப்படும். அதாவது, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு உத்தரவு அமலுக்கு வருகிறது. யார்-யாருக்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசுத் துறைகளில் முழு நேர பணியாளர்களாக இருந்து, அகவிலைப்படியை பெற்றுவரும் அனைவருக்குமே இந்த அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு பொருந்தும். ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் அல்லது அகில இந்திய கல்வி குழுமத்தின் நிர்வாகத்துக்குள் வரும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு டிப்ளமோ கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடல்கல்வி இயக்குனர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும். அங்கன்வாடி ஊழியர்கள் மேலும் வருவாய்த்துறையின் கீழ் வரும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் கிராம பஞ்சாயத்து கிளார்க்குகள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வினால் அரசுத் துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை, ஆயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை கூடுதலாக பெறுவார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது. அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள். தேர்தல் கமிஷன் அனுமதி பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற உத்தரவுகளை எந்த மாநில அரசும் தானாக பிறப்பித்துவிட முடியாது. அதுபற்றி கேட்டபோது, இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகே இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

போக்குவரத்துக்கு உதவும் இரண்டாவது செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவியது

இந்தியாவின் இரண்டாவது நேவிகேஷனல் (போக்குவரத்து உதவி) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1 பி வெள்ளிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 5.14 மணிக்கு பி.எஸ்.எல்.வி. - சி 24 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 58.5 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த 2ஆம் தேதி காலை 6.44 மணிக்குத் துவங்கியிருந்தது. பல்வேறு விதமான போக்குவரத்துகளைக் கண்காணிப்பதற்காக இந்தியா ஏவுவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஏழு நேவிகேஷனல் செயற்கைக்கோள் வரிசையில் இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1 பி இரண்டாவதாகும். இந்த செயற்கைக் கோள் 1432 கிலோ கிராம் எடையை உடையது. வெள்ளி மாலை சரியாக ஐந்தே கால் மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து முதலாவது ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கு முந்தைய நேவிகேஷனல் செயற்கைக் கோளான ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஏ 2013ஆம் ஆண்டு ஜூலையில் ஏவப்பட்டது. முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டு ஏழு மாதங்களுக்குள்ளாகவே இந்த இரண்டாவது செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஏவப்பட்டிருக்கும் செயற்கைக்கோளின் வாழ்நாள் பத்து ஆண்டுகளாகும். நிலை நிறுத்தப்படும் புள்ளியிலிருந்து ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல்வழி, வான் வழி, தரைப் போக்குவரத்து ஆகியவற்றைக் கண்காணிக்கவும் பேரிடர் கால உதவிக்காகவும் இந்தியா உருவாக்க முயற்சிக்கும் இந்தியன் ரீஜினல் நேவிகேஷனல் சாட்டிலைட் சிஸ்டம் செயல்பட வேண்டுமென்றால், நான்கு செயற்கைக்கோள்களாவது ஏவப்பட்டிருக்க வேண்டும். தற்போது இந்த செயற்கைக்கோளை ஏவப் பயன்படுத்தியிருக்கும் பி.எஸ்.எல்.வி. - சி 24 ராக்கெட் எக்ஸெல் வகையைச் சேர்ந்ததாகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவப் பயன்படுத்தப்படும் இந்த ராக்கெட்டை இஸ்ரோ ஐந்தாவது முறையாகப் பயன்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இம்மாதிரி கண்காணிப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

புதன், 2 ஏப்ரல், 2014

இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து: சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை

: 'புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பால், இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு ஆபத்து ஏற்படும்' என, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஐ.பி.சி.சி., எனப்படும், நாடுகளுக்கு இடையோன சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு, ஜப்பானில் வெளியிட்டுள்ள அறிக்கை:காடுகள் அழிக்கப்படுவது, தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. புவி வெப்பமயமாகி, பல பாதிப்புகள் ஏற்படத் துவங்கியுள்ளன, கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, சர்வதேச நாடுகளில், பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளில், உணவுப் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில், காற்றின், வெப்பத்தின் தன்மை அதிகரித்துள்ளது. பருவ மழை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. கங்கை நதியிலும், நீரோட்டம் குறைவால், அங்கு அதிகமாக கிடைக்கும் மீன் வளம் குறையும். விளைச்சல் குறையும் இதுபோன்ற பிரச்னைகளால், விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதால், உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். அதிகமாக பயன்படுத்தப்படும், கோதுமை, அரிசி ஆகியவற்றின் விளைச்சல் குறையும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 'இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசை வற்புறுத்திஉள்ளனர்.உலக நாடுகளில் நிலவும் பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற அறிவியல் பூர்வமான தகவல்களை தெரிவிக்கும் இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படுகிறது; இது, 1988ல் ஏற்படுத்தப்பட்டது.இதன் தலைவராக, இந்தியரான, ராஜேந்திரா கே பச்சோரி உள்ளார்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

சுற்றுச்சூழல் மூடநம்பிக்கைகள்: நதி நீர் வீணாகக் கடலில் கலக்கிறதா?

‘வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் என்ன?' என்பது போன்ற குரலை நாம் அடிக்கடி கேட்கலாம். தமிழகத்துடன் நதிநீர்ப் பங்கீடு செய்துகொள்ளப்படுவது சரிதான். ஆனால், நதிநீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்ற வாதம்தான் தவறு. கடல்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் நதிகளும் அடக்கம். திடீரென்று, உலகில் உள்ள எல்லா நதிகளையும் கடலில் கலக்கவிடாமல் தடுத்துவிடுகிறோம் என்று கற்பனையாக வைத்துக்கொள்வோம். அப்போது என்ன ஆகும்? கடல் மட்டம் குறிப்பிட்ட அளவு குறைந்துவிடும். உலகின் தட்பவெப்பத்தை நிர்ணயிப்பதில் கடல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, கடல் மட்டம் அளவுக்கு அதிகமாக உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உலகம் பேரழிவைச் சந்திக்கும். மேலும், கடல் நீரின் உப்புத் தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில், கடலில் கலக்கும் ஆற்று நீரும் ஒரு முக்கியக் காரணம். அதிக அளவில் ஆறுகள் கலக்கும்போது, அந்தக் கடலின் உப்புத்தன்மை குறிப்பிடத்தகுந்த அளவு குறைவாக இருக்கும். மிகக் குறைவான ஆறுகள் கலக்கும் கடலில், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பால்ட்டிக் கடலில் ஏராளமான ஆறுகள் கலப்பதால் அதன் உப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயுள்ள செங்கடல் பகுதியில் மிகக் குறைந்த அளவே நதிகள் கலப்பதால் அந்தப் பகுதியில் உப்புத்தன்மை உலகிலேயே மிகவும் அதிக அளவாக 40% காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஒரு நதி உருவான இடத்திலிருந்து கடலில் கலப்பது வரை, அந்த நதியின் நீரை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு இயற்கைச் சூழல்தொகுதிகள் (Eco system) உருவாகியிருக்கும். பாதியிலேயே நதியைத் தடுத்துவிட்டால் அந்தச் சூழல்தொகுதிகள் அழிவுக்கு உள்ளாகி, இயற்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். இயற்கையின் அம்சங்களில், செயல்பாடுகளில் ஏதுவுமே வீண் இல்லை. எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. எனவே, இயற்கையின் போக்கை இயற்கையிடமே விட்டுவிடுவதுதான் நம் அனைவருக்கும் நல்லது.

திங்கள், 31 மார்ச், 2014

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோதனை முறையில் மத்திய சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் 1,153 வாக்கு சாவடிகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வாக்களித்த உடன் இயந்திரத்தில் இருந்து ஒப்புகைச் சீட்டு ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தாட்சி சீட்டில் ரகசிய முறையில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். கண்ணாடி ஜன்னலுக்கு நேராக அத்தாட்சி சீட்டை உயர்த்தி பார்த்தால் சின்னம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தகவல் அளித்துள்ளார்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.

வெள்ளி, 28 மார்ச், 2014

மார்ச் 28

தீரர் சத்யமூர்த்தி நினைவு தினம் இன்று.உலக புகழ்பெற்ற 'தாய்' நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

நாளை (பங்குனி 3/17.3.14) தமிழ்நாடு முழுவதும் "வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம்"நடைபெறும். போலியோ சொட்டு மருந்து போன்று வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்குவதும் மிக மிக முக்கியமானது.மாலைக் கண் நோய்,கண்களில் புள்ளி விழுதல் போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்க 6 மாதம் ஒருமுறை கொடுக்கப்படுகிறது.பிறந்த 6 மாதம் வரையுள்ள குழந்தைகளாயிருப்பின் அதன் தாய்மார்களுக்கும்,6 மாதத்திற்கு மேல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் தவறாமல் கொடுக்க வேண்டும்.இம் மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,பால்வாடி மையங்களிலும் வழங்கப்படும்.நாளை முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படுமாயினும் நாளையே வழங்குதல் சிறப்பு.நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை.பகிர்வோம்.நோயற்ற வலிமையான பாரதம் உருவாக துணை நிற்போம்.

வெள்ளி, 14 மார்ச், 2014

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு. சாந்தகுமார் தெரிவித்தார். மேலும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.