திங்கள், 24 பிப்ரவரி, 2014
*பிப்ரவரி 25 நிகழ்வுகள்* *********************** 1797 - வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர். 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கானஅமெரிக்கக் காப்புரிமத்தைப்பெற்றார். 1837 - தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப்பெற்றார். 1921 - ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 1925 - சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. 1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார். 1945 - இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது. 1948 - செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. 1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார். 1980 - சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. 1986 - பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார். 1988 - மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது. 1991 - வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவுதி அரேபியாவின் டாஹ்ரான் நரைல் அமெரிக்க இரணுவத்தளத்தில்வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1992 - அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர். 1994 - மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும்9 இஸ்ரேலியர்களும்கொல்லப்பட்டனர். 2006 - உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது. 2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது. பிறப்புகள்[தொகு] 1915 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006) 1982 - தனுஷ், தமிழ்த் திரைப்பட நடிகர். இறப்புகள்[தொகு] 1950 - ஜோர்ஜ் மினோட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1885) 1971 - தியோடர் சிவெட்பேர்க், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (பி. 1884) 1999 - கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1912) 2001 - சேர் டொனால்ட் பிறட்மன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் (பி. 1908) 2004 - நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர்,(பி. 1912) சிறப்பு நாள்[தொகு] குவெய்த் - தேசிய நாள் பிலிப்பைன்ஸ் - மக்கள் எழுச்சி நாள் (1986)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)