விலையேற்ற குறியீட்டினை அளவிடும் முறையை காண்பதற்கு முன்னதாக,
விலையேற்றதைக் கணக்கிடும் முறையின் அடிப்படை சிந்தனையை புரிந்துகொள்வோம்.
நாம் ஒரு உதாரண கணக்கிடும் முறையை எடுத்துக்கொள்வோம். பால், காய், பழம்
என்ற மூன்று பொருட்களை நான் நுகர்கிறேன். சென்ற மாதம், இந்த மூன்று
பொருட்களின் விலைகளும் ஒரு கிலோவிற்கு ரூ10 என்று இருந்தன. இந்த மாதம்,
இவற்றின் விலைகள் முறையே பால் ரூ12.50, காய் ரூ7.50, பழம் ரூ15 என்றும்
மாறியிருக்கின்றன. இதில் பால் விலை 25%, பழம் விலை 50% உயர்ந்தும் காய்
விலை 25% குறைந்தும் உள்ளன. மூன்று பொருட்களையும் ரூ30 என்று சென்ற மாதம்
வாங்கினோம், இந்த மாதம் ரூ35க்கு வாங்க உள்ளோம், எனவே பொது விலையேற்றம்
16.7% (5/30x100) தான். ஆனால் இது விலையேற்றதை அளவிடும் சரியான
முறைகிடையாது.
நம் நுகர்வில் இந்த மூன்று பொருட்களும் ஒரே அளவு முக்கியத்துவத்தை
பெறுவதில்லை. பால் 20%, காய் 50%, பழம் 30% என்று முக்கியத்துவம் இருப்பதாக
வைத்துக்கொள்வோம். இதனை weights என்று புள்ளியல் துறையில் குறிப்பிடுவர்.
பால் விலையேற்றதைக் கணக்கிட weight x விலையேற்ற சதவிகிதம் என்று இருக்க வேண்டும்.
கீழ்காணும் வகையில் பொது விலைமட்டம் உயர்வைக் கணக்கிடலாம். முன்பு weight
இல்லாமல் கணக்கிடும் போதும் விலையேற்றம் 16.7% என்றும், இப்போது weight
சேர்த்து கணக்கிடும் போது விலையேற்றம் 7.5% என்றும் பார்க்கிறோம். நம்
நுகர்வில் 50% weight உள்ள காயின் விலை 25% குறைந்துள்ளது, மீதம் உள்ள
இரண்டு பொருட்களில் 20% weight உள்ள பால் விலை 25%மும், 30% weight உள்ள
பழத்தின் விலை 50%மும் உயர்ந்துள்ளதை கவனித்தால், நம்மை பாதிக்கும் உண்மை
விலையேற்றம் குறைவாக உள்ளதை புரிந்துகொள்ள முடியும்.
ஆகவே, பொருளின் விலையேற்றமும், அப்பொருள் நம் நுகர்வில் எவ்வளவு
முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் பொறுத்துதான் பொது விலையேற்றம்
கணக்கிடப்படும். இதுதான் விலையேற்றதை கணக்கிடும் முறையின் அடிப்படை
சூத்திரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக