TET நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குவர இயலாதவர்களுக்குஒரு வாய்ப்பளிக்கும்வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும்வகையில்நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குவருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில்
சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்குஇதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும்,இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
செவ்வாய், 28 ஜனவரி, 2014
பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்| சிந்தனை கதைகள்
ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்
''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு?
சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா,
நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்
வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்
மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
நாம் ஒவொருவரும் இப்படி தன பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு
பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி | தமிழ் அறிவு கதைகள்

காலச் சுவடுகள் சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் (ஜன.28- 1882)
சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேநாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1820 - பாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது. 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர். 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர். 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர். 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73-வது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர். 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
Today's main headlines: 1. Modi Government Abetted, Pushed 2002 Riots: Rahul - http://tnie.in/ 1fhYfpO2. India to Review Gold Import Curbs by March End: Chidambaram - http://tnie.in/ 1fhYlxR3. India Eyes FDI in Railways - http://tnie.in/ 1f2BNAl4. Andaman Tragedy: Shaken Survivors Refuse Stretchers, Families Accompany in Mortuary Vans - http://tnie.in/ 1f2BYvv5. Telangana Ministers Protest Against Kiran Reddy in Andhra Assembly - http://tnie.in/ 1fhYscx
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)