புதன், 26 பிப்ரவரி, 2014

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான திறனாய்வுத்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகம் முழுவதும் 520 மையங்களில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர். இதன் ரிசல்ட் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்கு நர் கே.தேவராஜனிடம் கேட்டபோது, ‘‘விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. அனைத்து மாவட்டங்க ளில் இருந்தும் வந்த பிறகு, கணினியில் மதிப்பீட்டு பணி கள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை 3 வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்