திங்கள், 3 மார்ச், 2014

தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி இன்று SSTA சங்கத்தை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரை சந்தித்து 2013-14ஆம் கல்வியாண்டுகான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தமாறு வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன எனவும், அரசின் அனுமதிகாக காத்திருப்பதாகவும், அனுமதி வந்த உடன் ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுகுறித்து அரசு உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி நாளை சங்க மாநில பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக சங்க மாநில பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் அதற்குள் தேர்தல் அறிவிப்பு வராமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல் தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையின் போது பத்திரிக்கையாளர்கள் குவிந்ததால் அவர்களை டி.ஆர்.பி.,க்குள்அழைத்து சுமார் அரை மணி அவர்களிடம் பேசினர்.
TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது
மூன்று நபர் குழு விசாரணை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் 1. AGRICULTURE DEPARTMENT 2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT 3. ANIMAL HUSBANDRY DEPARTMEN 4 .FISHERIES DEPARTMENT. 5. HIGHWAYS DEPARTMENT 6. RURAL DEVELOPMENT DEPARTMENT 7. INDUSTRIES AND COMMERCE DEPARTMENT 8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT 9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT 10 MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT 11. SERICULTURE DEPARTMENT 12. PUBLIC WORKS DEPARTMEN 13. STATE TRANSPORT AUTHORIT 14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT 15. TOWN PANCHAYA 16. ELECTRICAL INSPECTORAT 17.I CHENNAI CORPORATION 18. REVENUE DEPARTMENT 19. POLICE DEPARTMEN 20. FOREST DEPARTMENT
தனது முடிவை அவசரமாக திரும்பப் பெற்ற மனிதவள அமைச்சகம் மொத்தம் 12 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை, மத்திய மனிதவள அமைச்சகம் அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள், தங்களின் பொறுப்புகளை, அந்தந்த பல்கலைகளின் மூத்த பேராசிரியர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூறப்படுவதாவது: பதவி நீட்டிப்பை வழங்கி மனிதவள அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதம் என்றும், அது மத்திய பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்றும் UGC கருதியது. மேலும், இதுதொடர்பாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. மத்தியப் பல்கலைக்கழக சட்டத்தின்படி, முதன்முதலாக துணைவேந்தர் பணியில் அமர்வோர், 5 ஆண்டுகளைத் தாண்டி, பணி நீட்டிப்பு பெறமாட்டார்கள் என்பது விதி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: தேவை அற்றதை நீக்குங்கள்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: தேவை அற்றதை நீக்குங்கள்: குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக்கொண்டுகாட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி அவற்றை ஏதாவது ஒரு வகையில் இ...