புதன், 29 ஜனவரி, 2014

30 வருடங்களுக்கு பிறகு நாளை மறுநாள் வானில் தெரியும் அதிசயம்!.
பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது. அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது.
அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் நிலவு தோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்கு இதனைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் இரண்டு முறை இது போன்று சூப்பர் நிலவு தோன்றும் வாய்ப்பு இனி 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தான் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருக்கும் மற்ற மூன்று நிகழ்வுகள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது....!

விலையேற்றதை கணக்கிடும் முறை - என்றால் என்ன?

விலையேற்ற குறியீட்டினை அளவிடும் முறையை காண்பதற்கு முன்னதாக, விலையேற்றதைக் கணக்கிடும் முறையின் அடிப்படை சிந்தனையை புரிந்துகொள்வோம்.
நாம் ஒரு உதாரண கணக்கிடும் முறையை எடுத்துக்கொள்வோம். பால், காய், பழம் என்ற மூன்று பொருட்களை நான் நுகர்கிறேன். சென்ற மாதம், இந்த மூன்று பொருட்களின் விலைகளும் ஒரு கிலோவிற்கு ரூ10 என்று இருந்தன. இந்த மாதம், இவற்றின் விலைகள் முறையே பால் ரூ12.50, காய் ரூ7.50, பழம் ரூ15 என்றும் மாறியிருக்கின்றன. இதில் பால் விலை 25%, பழம் விலை 50% உயர்ந்தும் காய் விலை 25% குறைந்தும் உள்ளன. மூன்று பொருட்களையும் ரூ30 என்று சென்ற மாதம் வாங்கினோம், இந்த மாதம் ரூ35க்கு வாங்க உள்ளோம், எனவே பொது விலையேற்றம் 16.7% (5/30x100) தான். ஆனால் இது விலையேற்றதை அளவிடும் சரியான முறைகிடையாது.
நம் நுகர்வில் இந்த மூன்று பொருட்களும் ஒரே அளவு முக்கியத்துவத்தை பெறுவதில்லை. பால் 20%, காய் 50%, பழம் 30% என்று முக்கியத்துவம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதனை weights என்று புள்ளியல் துறையில் குறிப்பிடுவர்.
பால் விலையேற்றதைக் கணக்கிட weight x விலையேற்ற சதவிகிதம் என்று இருக்க வேண்டும்.
கீழ்காணும் வகையில் பொது விலைமட்டம் உயர்வைக் கணக்கிடலாம். முன்பு weight இல்லாமல் கணக்கிடும் போதும் விலையேற்றம் 16.7% என்றும், இப்போது weight சேர்த்து கணக்கிடும் போது விலையேற்றம் 7.5% என்றும் பார்க்கிறோம். நம் நுகர்வில் 50% weight உள்ள காயின் விலை 25% குறைந்துள்ளது, மீதம் உள்ள இரண்டு பொருட்களில் 20% weight உள்ள பால் விலை 25%மும், 30% weight உள்ள பழத்தின் விலை 50%மும் உயர்ந்துள்ளதை கவனித்தால், நம்மை பாதிக்கும் உண்மை விலையேற்றம் குறைவாக உள்ளதை புரிந்துகொள்ள முடியும்.
ஆகவே, பொருளின் விலையேற்றமும், அப்பொருள் நம் நுகர்வில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் பொறுத்துதான் பொது விலையேற்றம் கணக்கிடப்படும். இதுதான் விலையேற்றதை கணக்கிடும் முறையின் அடிப்படை சூத்திரம்.
30 வருடங்களுக்கு பிறகு நாளை மறுநாள் வானில் தெரியும் அதிசயம்!. பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது. அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது. அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் நிலவு தோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்கு இதனைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே மாதத்தில் இரண்டு முறை இது போன்று சூப்பர் நிலவு தோன்றும் வாய்ப்பு இனி 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தான் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருக்கும் மற்ற மூன்று நிகழ்வுகள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது....!
மரம் நன்மை செய்யுது மனுஷன்! ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக்கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது. கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள். "மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்?' என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார். நடுங்கியபடி அவள் மன்னர் முன் நின்றாள். ""மன்னா! அறியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். மூன்று நாள் பட்டினியாக என் கணவர் படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு பழம் பறிக்க மரத்தின் மீது கல்லெறிந்தேன். தவறுதலாக அது உங்கள் மீது பட்டு விட்டது'' என்று சொல்லி கும்பிட்டாள். மந்திரியிடம் மன்னன்,""அரண்மனைக்கு இவளை அழைத்துச் சென்று, வயிறார உணவும், உடையும், நூறு பொற்காசும் கொடுத்தனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்'' என ஆணையிட்டார். மந்திரி,""மன்னா! இது தான் தப்புக்கு தண்டனையா?'' என்று ஆச்சர்யமாக கேட்டார். ""இது பஞ்ச காலம். அவளும் நாம் இருப்பதை அறியாமலேயே தவறு செய்தாள். இந்த பஞ்சகாலத்தில், ஓரறிவு உயிரான மாமரமே கல்லெறிந்தால் கனியைக் கொடுக்கிறது. ஆறறிவு படைத்த நாம் ஏதாவது கொடுப்பது தானே சரி!'' என்றான்.