ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் ஈரோடு இந்து கல்வி நிலைய
மாணவர் எஸ்.நவீன்குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பி.வி.பி.
பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 2-வது இடத்தையும், ஈரோடு இந்து
கல்வி நிலையம் மாணவி எல்.சுவாதி 3-வது இடத்தையும் பிடித்தனர்.முதல் 3 இடங்கள்
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 26 ஆயிரத்து 464 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 683 பேர் வெற்றி பெற்றனர். இது 97.05 சதவீதமாகும்.
இதில் 1200-க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்ற ஈரோடு மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவர் எஸ்.நவீன்குமார் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தார்.
திண்டல் பாரதி வித்யா பவன் (பி.வி.பி.) பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 1200-க்கு 1188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும், மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவி எல்.சுவாதி மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
மதிப்பெண்கள்
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ்.நவீன்குமார் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ் -196
ஆங்கிலம்- 195
இயற்பியல்- 199
வேதியியல்- 200
கணிதம்- 200
கணினி அறிவியல்- 199
மொத்தம்- 1,189
2-வது இடம் பிடித்த மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்- 197
ஆங்கிலம்- 196
இயற்பியல்- 200
வேதியியல்- 199
கணிதம்- 198
கணினி அறிவியல்- 198
மொத்தம்- 1,188
3-வது இடம் பிடித்த மாணவி எல்.சுவாதி பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்- 195
ஆங்கிலம்-192
இயற்பியல்- 200
வேதியியல்-200
கணிதம்- 200
கணினி அறிவியல்-200
மொத்தம்- 1,187
200-க்கு 200
முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர் நவீன்குமார் வேதியியல் மற்றும் கணித பாடத்தில் 200-க்கு 200 பெற்று உள்ளார். 2-ம் இடம் பிடித்த மாணவி பிரீத்திஸ்ரீ இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 பெற்று உள்ளார். ஆனால் 3-ம் இடம் பிடித்து உள்ள மாணவி எல்.சுவாதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என்று 4 முக்கிய பாடங்களிலும் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக