உதவி தொகை பெற 8–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 மத்திய அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகை 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை கிடைக்கும்.
முன்பு இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகளவில் மாணவ–மாணவிகளிடம் இல்லாமல் இருந்தது. இப்போது வருடத்துக்கு வருடம் தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் தமிழகம் முழுவதும் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவ– மாணவிகள் 49 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு ஆனால், இந்த வருடம் கடந்த ஆண்டைவிட, மூன்று மடங்கு அதிகமாக மாணவ–மாணவிகள் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. மொத்தம் 519 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடக்கும் மையங்களுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 8–ம் வகுப்பு படிக்கும் மாணவ– மாணவிகளை, ஆசிரியர்கள் அழைத்துச்சென்று இந்த தேர்வை எழுத வைத்தனர். மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் மாணவ–மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். நேற்று பிற்பகல் 2½ மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடந்தது.
இந்த தேர்வின் முடிவுகள் இன்னும் இரண்டு மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்குனரகம் செய்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக