தனது முடிவை அவசரமாக திரும்பப் பெற்ற மனிதவள அமைச்சகம்
மொத்தம் 12 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை, மத்திய மனிதவள அமைச்சகம் அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள், தங்களின் பொறுப்புகளை, அந்தந்த பல்கலைகளின் மூத்த பேராசிரியர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: பதவி நீட்டிப்பை வழங்கி மனிதவள அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதம் என்றும், அது மத்திய பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்றும் UGC கருதியது. மேலும், இதுதொடர்பாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
மத்தியப் பல்கலைக்கழக சட்டத்தின்படி, முதன்முதலாக துணைவேந்தர் பணியில் அமர்வோர், 5 ஆண்டுகளைத் தாண்டி, பணி நீட்டிப்பு பெறமாட்டார்கள் என்பது விதி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக