நவூரு பொதுவாக இனிமையான தீவு எனஅழைக்கப்படுவதுண்டு. தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிக அண்மையிலுள்ள தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். நவூரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை.
இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. இதன் மக்கள்தொகை 9,378 பேர், இது வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். "நவூரு" என்ற சொல் நவூருவ மொழியில் அனாஓரோ, "நான் கடற்கரைக்குப் போகிறேன்" எனப் பொருள். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மைக்குரோனேசிய மற்றும் பொலினேசிய மக்கள் வசிக்கும் நவூரு தீவு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் செருமன் பேரரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
முதலாம் உலகப் போருக்குப் பின், ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் உலக நாடுகளின் அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நவூரு சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது.தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.
தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
1959-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார் *திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப்படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும். *இவர் உடல்நிலை சரியில்லாமல் 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
வெள்ளி, 31 ஜனவரி, 2014
புதன், 29 ஜனவரி, 2014
30 வருடங்களுக்கு பிறகு நாளை மறுநாள் வானில் தெரியும் அதிசயம்!.
பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது. அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது.
அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் நிலவு தோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்கு இதனைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் இரண்டு முறை இது போன்று சூப்பர் நிலவு தோன்றும் வாய்ப்பு இனி 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தான் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருக்கும் மற்ற மூன்று நிகழ்வுகள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது....!

விலையேற்றதை கணக்கிடும் முறை - என்றால் என்ன?
விலையேற்ற குறியீட்டினை அளவிடும் முறையை காண்பதற்கு முன்னதாக,
விலையேற்றதைக் கணக்கிடும் முறையின் அடிப்படை சிந்தனையை புரிந்துகொள்வோம்.
நாம் ஒரு உதாரண கணக்கிடும் முறையை எடுத்துக்கொள்வோம். பால், காய், பழம்
என்ற மூன்று பொருட்களை நான் நுகர்கிறேன். சென்ற மாதம், இந்த மூன்று
பொருட்களின் விலைகளும் ஒரு கிலோவிற்கு ரூ10 என்று இருந்தன. இந்த மாதம்,
இவற்றின் விலைகள் முறையே பால் ரூ12.50, காய் ரூ7.50, பழம் ரூ15 என்றும்
மாறியிருக்கின்றன. இதில் பால் விலை 25%, பழம் விலை 50% உயர்ந்தும் காய்
விலை 25% குறைந்தும் உள்ளன. மூன்று பொருட்களையும் ரூ30 என்று சென்ற மாதம்
வாங்கினோம், இந்த மாதம் ரூ35க்கு வாங்க உள்ளோம், எனவே பொது விலையேற்றம்
16.7% (5/30x100) தான். ஆனால் இது விலையேற்றதை அளவிடும் சரியான
முறைகிடையாது.
நம் நுகர்வில் இந்த மூன்று பொருட்களும் ஒரே அளவு முக்கியத்துவத்தை
பெறுவதில்லை. பால் 20%, காய் 50%, பழம் 30% என்று முக்கியத்துவம் இருப்பதாக
வைத்துக்கொள்வோம். இதனை weights என்று புள்ளியல் துறையில் குறிப்பிடுவர்.
பால் விலையேற்றதைக் கணக்கிட weight x விலையேற்ற சதவிகிதம் என்று இருக்க வேண்டும்.
கீழ்காணும் வகையில் பொது விலைமட்டம் உயர்வைக் கணக்கிடலாம். முன்பு weight
இல்லாமல் கணக்கிடும் போதும் விலையேற்றம் 16.7% என்றும், இப்போது weight
சேர்த்து கணக்கிடும் போது விலையேற்றம் 7.5% என்றும் பார்க்கிறோம். நம்
நுகர்வில் 50% weight உள்ள காயின் விலை 25% குறைந்துள்ளது, மீதம் உள்ள
இரண்டு பொருட்களில் 20% weight உள்ள பால் விலை 25%மும், 30% weight உள்ள
பழத்தின் விலை 50%மும் உயர்ந்துள்ளதை கவனித்தால், நம்மை பாதிக்கும் உண்மை
விலையேற்றம் குறைவாக உள்ளதை புரிந்துகொள்ள முடியும்.
ஆகவே, பொருளின் விலையேற்றமும், அப்பொருள் நம் நுகர்வில் எவ்வளவு
முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் பொறுத்துதான் பொது விலையேற்றம்
கணக்கிடப்படும். இதுதான் விலையேற்றதை கணக்கிடும் முறையின் அடிப்படை
சூத்திரம்.
30 வருடங்களுக்கு பிறகு நாளை மறுநாள் வானில் தெரியும் அதிசயம்!.
பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது. அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது.
அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் நிலவு தோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்கு இதனைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் இரண்டு முறை இது போன்று சூப்பர் நிலவு தோன்றும் வாய்ப்பு இனி 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தான் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருக்கும் மற்ற மூன்று நிகழ்வுகள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது....!
மரம் நன்மை செய்யுது மனுஷன்!
ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக்கடந்து வெகுதூரம் சென்று விட்டனர்.
ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது.
கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள்.
"மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்?' என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார்.
நடுங்கியபடி அவள் மன்னர் முன் நின்றாள்.
""மன்னா! அறியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். மூன்று நாள் பட்டினியாக என் கணவர் படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு பழம் பறிக்க மரத்தின் மீது கல்லெறிந்தேன். தவறுதலாக அது உங்கள் மீது பட்டு விட்டது'' என்று சொல்லி கும்பிட்டாள்.
மந்திரியிடம் மன்னன்,""அரண்மனைக்கு இவளை அழைத்துச் சென்று, வயிறார உணவும், உடையும், நூறு பொற்காசும் கொடுத்தனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்'' என ஆணையிட்டார்.
மந்திரி,""மன்னா! இது தான் தப்புக்கு தண்டனையா?'' என்று ஆச்சர்யமாக கேட்டார்.
""இது பஞ்ச காலம். அவளும் நாம் இருப்பதை அறியாமலேயே தவறு செய்தாள். இந்த பஞ்சகாலத்தில், ஓரறிவு உயிரான மாமரமே கல்லெறிந்தால் கனியைக் கொடுக்கிறது. ஆறறிவு படைத்த நாம் ஏதாவது கொடுப்பது தானே சரி!'' என்றான்.
செவ்வாய், 28 ஜனவரி, 2014
TET நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குவர இயலாதவர்களுக்குஒரு வாய்ப்பளிக்கும்வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும்வகையில்நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குவருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில்
சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்குஇதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும்,இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்| சிந்தனை கதைகள்
ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்
''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு?
சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா,
நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்
வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்
மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
நாம் ஒவொருவரும் இப்படி தன பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு
பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி | தமிழ் அறிவு கதைகள்

காலச் சுவடுகள் சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் (ஜன.28- 1882)
சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேநாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1820 - பாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது. 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர். 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர். 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர். 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73-வது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர். 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
Today's main headlines: 1. Modi Government Abetted, Pushed 2002 Riots: Rahul - http://tnie.in/ 1fhYfpO2. India to Review Gold Import Curbs by March End: Chidambaram - http://tnie.in/ 1fhYlxR3. India Eyes FDI in Railways - http://tnie.in/ 1f2BNAl4. Andaman Tragedy: Shaken Survivors Refuse Stretchers, Families Accompany in Mortuary Vans - http://tnie.in/ 1f2BYvv5. Telangana Ministers Protest Against Kiran Reddy in Andhra Assembly - http://tnie.in/ 1fhYscx
திங்கள், 27 ஜனவரி, 2014
ஹென்றி ஃபோர்ட் !!!
அமெரிக்க கோடீஸ்வரராக இருந்த ஹென்றி ஃபோர்டைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் வந்தார்.
“சார், உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே எப்படி?” என்று கேட்டார் இளைஞர்.
“முயற்சி செய்தால் நீ கூட சம்பாதித்து விடலாம்!” என்றார் ஹென்றி ஃபோர்ட்.
“என்னிடம் தொழில் தொடங்க அவ்வளவு பணம் இல்லை. ஒன்றும் இல்லாமல் எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று கவலையாக இருக்கிறேன்.”
“என்னிடம் இல்லாத மதிப்புமிக்க ஒரு விஷயம் உன்னிடம் இருக்கிறது. அதன் மூலம் எதையும் சாதிக்கலாம்!”
“அப்படி எதுவும் என்னிடம் இல்லையே?”
“இளமை என்ற ஒப்பற்ற விஷயம் இருக்கிறதே! நான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை விட உன்னால் பல மடங்கு இளமையை வைத்து சம்பாதிக்க இயலும். அந்த இளமையை எனக்குக் கொடுக்கிறாயா? என் சொத்தை எழுதித் தருகிறேன்” என்று கேட்டார் ஹென்றி ஃபோர்ட்.
இளைஞர் நம்பிக்கையுடன் கிளம்பினார் !!

நீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்! ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்…. அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை! எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர். பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர். பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். நன்றி தினமணி! புகைப்படம்: நீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்! ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்…. அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை! எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர். பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர். பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். நன்றி தினமணி!
நீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்!
ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.
ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.
அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால்,
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.
நன்றி தினமணி!

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):
அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.
பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்.
நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.
சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை - தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சுப்ரமணியம், செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம்.
பதவி உயர்வு:
சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.மனோகரனுக்கு, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அந்தஸ்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)