செவ்வாய், 28 ஜனவரி, 2014

காலச் சுவடுகள் சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் (ஜன.28- 1882)

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதேநாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1820 - பாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது. 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர். 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர். 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். 1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர். 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73-வது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர். 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: