ஞாயிறு, 30 மார்ச், 2014

ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.

வெள்ளி, 28 மார்ச், 2014

மார்ச் 28

தீரர் சத்யமூர்த்தி நினைவு தினம் இன்று.உலக புகழ்பெற்ற 'தாய்' நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

நாளை (பங்குனி 3/17.3.14) தமிழ்நாடு முழுவதும் "வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம்"நடைபெறும். போலியோ சொட்டு மருந்து போன்று வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்குவதும் மிக மிக முக்கியமானது.மாலைக் கண் நோய்,கண்களில் புள்ளி விழுதல் போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்க 6 மாதம் ஒருமுறை கொடுக்கப்படுகிறது.பிறந்த 6 மாதம் வரையுள்ள குழந்தைகளாயிருப்பின் அதன் தாய்மார்களுக்கும்,6 மாதத்திற்கு மேல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் தவறாமல் கொடுக்க வேண்டும்.இம் மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,பால்வாடி மையங்களிலும் வழங்கப்படும்.நாளை முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படுமாயினும் நாளையே வழங்குதல் சிறப்பு.நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை.பகிர்வோம்.நோயற்ற வலிமையான பாரதம் உருவாக துணை நிற்போம்.

வெள்ளி, 14 மார்ச், 2014

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு. சாந்தகுமார் தெரிவித்தார். மேலும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
 
இனிய PI நாள்!
பை நாள் உலகம் முழுவதும் (3/14) மார்ச் 14 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் விட்டம் ஒரு வட்டத்தின் சுற்றளவு விகிதம் - - சுமார் 3,14159 இது பை (கிரேக்கம் கடிதம் "π") ஒரு நிலையான பிரதிநிதித்துவம் கணிதம் பயன்படுத்தப்படும் சின்னமாக இருக்கிறது
Ahmed Zainy இன் படங்கள்
ஒரு வாழ்க்கை ஒரு வெற்றி என்றால், ஒரு எக்ஸ் பிளஸ் Y மற்றும் z சமம். வேலை x ஆகிறது; Y நாடகம் ஆகும்; மற்றும் z உன் வாயை மூடி வைத்து.
135 ஆண்டுகளுக்கு முன்பு இன்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், உலகின் மிக செல்வாக்கு மிக்க இயற்பியல் ஒன்று பிறந்தார். 
 · 

புதன், 12 மார்ச், 2014

AIRF urges for 25% allowance hike as DA crosses 100%

All India Railwaymen’s Federation 4, State Entry Road, New Delhi-110055No.AIRF/13 Dated: March 10, 2014 The Secretary(E), Railway Board, New Delhi Sub: Enhancement in the rates of various allowances by 25% consequent upon Dearness Allowance crossing 100% Ref.: Railway Board’s letter No.F(E)I/2011/AL-28/18 dated 13.06.2011(RBE No.87) and E(P&A) I-2011/SP-1/Misc.1 dated 13.06.2011(RBE No.88/2011) The VI CPC in their report had recommended that certain allowances, viz. Children Education Allowance, National Holiday Allowance, Daily Allowance, Washing Allowance, Breakdown Allowance, Special Compensatory Allowance, Cycle Maintenance Allowance, Fixed Conveyance Allowance, Road Mileage Allowance, Special Allowance to various categories of staff etc., should be increased by 25% whenever Dearness Allowance crosses 50%, and this recommendation was duly accepted by the Government of India. Based on the above recommendation of the VI CPC, these allowances have since been enhanced by 25% w.e.f. 01.01.2011, i.e. from the date, Dearness Allowance having been crossed 50%. Now, Dearness Allowance has crossed 100% w.e.f. 01.01.2014, there is, therefore, gross justification that the above allowances be further enhanced by additional 25%, as Dearness Allowance has again crossed the value of 50% after enhancement of these allowances w.e.f.01.01.2011.The Board are, therefore, requested to issue necessary instruction to this effect an early date Yours faithfully, sd/- (Shiva Gopal Mishra) General Secretary.

சனி, 8 மார்ச், 2014

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் : பிரவீன் குமார்

தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் குமார், தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகளிர் தின சிறப்பு : அவ்வையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் முனைவர் மூ. ராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு

 
              தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.
 
              அன்றைய தினம் முதலே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, ஊழியர்கள், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்ல முயல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

                       தேர்தல் ஆணைய உத்தரவில், 'தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மருத்துவ விடுப்பில் செல்ல முயன்றால், அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைத்து, ஒரு வார காலத்திற்குள் அறிக்கை பெறப்படும். சம்பந்தப்பட்ட ஊழியர், தேர்தல் பணியில் ஈடுபட உடல் தகுதியானவர் என, அறிக்கையில், தெரியவந்தால், அவர் மீது, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் { முகநூல் ) தெரிந்ததும் தெரியாததும் ஒரு பார்வை....

 
           இப்போது நாம் நம் முகம் அறியா நண்பர்களுடன் உரையாடிக் கொண்டும் செய்திகளை பகிர்ந்து கொண்டும் இருக்கும் Facebook எனப்படும் முகநூலைப் பற்றி தெரிந்து கொள்வோமா...?
        உங்களுடைய பொன்னான நேரத்தை சிறிது நேரம் செலவழியுங்கள் நண்பர்களே 
          அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது அனைவரும் அறிந்த விஷயம் . 
           ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. 
பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.
1. ஓர் எளிய தொடக்கம்: 
2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 
பின்னாளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது. 
பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook” என இதனைத் தொடங்கிய மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 
2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர். 
இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது. 
தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. 
காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். 
இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார். 
2. பிறந்தது பேஸ்புக்: 
2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். 
தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர். 
ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். 
பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.
3. படங்களின் பதிவுகள் தொடங்கின: 
தொடக்கத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை. 
அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது. 
இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்களே முக்கிய அம்சங்களாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
2013 செப்டம்பரில், இத்தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் கோடியைத் தாண்டி யதாக அறிவிக்கப்பட்டது. 
நாள் தோறும் 35 கோடி படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.
4. அனைவருக்கும் அனுமதி: 
கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 
2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. 
இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. 
அதற்கு முந்தைய ஆண்டில், இது 55 லட்சமாக மட்டுமே இருந்தது.
5. என் குறிக்கோள் பணம் அல்ல: 
2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. 
பேஸ்புக் இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். 
ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான ஸக்கர்பெர்க், "இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. 
நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை” என அறிவித்தார். 
ஏனென்றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை. 
"இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன்” என்றார்.
6. செய்தித் தொகுப்பு: 
பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. 
செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன. 
உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. 
இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 
இதனுடன் பேஸ்புக் MiniFeed என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.
7.புரோகிராமர்களுக்கு அனுமதி: 
2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, பேஸ்புக் தன்னுடைய Facebook Platform என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது. 
இது, பேஸ்புக் தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது. 
தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களுக்கு உதவி புரிய Facebook Markup Language என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. 
பல முக்கிய அப்ளி கேஷன்கள் பேஸ்புக் தள செயல்பாட்டில் இணைந்தன.
8. லாபம் ஈட்டியது: 
நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 
2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர். இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. (சென்ற வாரம், பேஸ்புக் தன் நான்காவது காலாண்டில் மட்டும் 206 கோடி டாலர் விற்பனை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 63% கூடுதலாகும்.)
9. பங்கு வெளியீடு: 
2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. 
இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.
10. நூறு கோடி பேர்: 
சென்ற 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக் இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நூறு கோடி யைத் தாண்டியதாக, ஸக்கர்பெர்க் அறிவித்தார். 
ஏறத்தாழ, இந்தப் புவியில் வாழும் ஏழு பேரில் ஒருவர், பேஸ்புக் பயனாளராக உள்ளனர். 
நூறு கோடிப் பேரை, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வைத்து, நட்பு ரீதியாக இணைப்பது என்பது மிகப் பெரிய பணி என அடக்கத்துடன் ஸக்கர்பெர்க் கூறினார். 
என் வாழ்வில் இதுதான் நான் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்றும் அறிவித்தார்.

திங்கள், 3 மார்ச், 2014

தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி இன்று SSTA சங்கத்தை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரை சந்தித்து 2013-14ஆம் கல்வியாண்டுகான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தமாறு வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன எனவும், அரசின் அனுமதிகாக காத்திருப்பதாகவும், அனுமதி வந்த உடன் ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுகுறித்து அரசு உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி நாளை சங்க மாநில பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக சங்க மாநில பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் அதற்குள் தேர்தல் அறிவிப்பு வராமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல் தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையின் போது பத்திரிக்கையாளர்கள் குவிந்ததால் அவர்களை டி.ஆர்.பி.,க்குள்அழைத்து சுமார் அரை மணி அவர்களிடம் பேசினர்.
TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது
மூன்று நபர் குழு விசாரணை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் 1. AGRICULTURE DEPARTMENT 2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT 3. ANIMAL HUSBANDRY DEPARTMEN 4 .FISHERIES DEPARTMENT. 5. HIGHWAYS DEPARTMENT 6. RURAL DEVELOPMENT DEPARTMENT 7. INDUSTRIES AND COMMERCE DEPARTMENT 8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT 9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT 10 MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT 11. SERICULTURE DEPARTMENT 12. PUBLIC WORKS DEPARTMEN 13. STATE TRANSPORT AUTHORIT 14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT 15. TOWN PANCHAYA 16. ELECTRICAL INSPECTORAT 17.I CHENNAI CORPORATION 18. REVENUE DEPARTMENT 19. POLICE DEPARTMEN 20. FOREST DEPARTMENT
தனது முடிவை அவசரமாக திரும்பப் பெற்ற மனிதவள அமைச்சகம் மொத்தம் 12 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை, மத்திய மனிதவள அமைச்சகம் அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள், தங்களின் பொறுப்புகளை, அந்தந்த பல்கலைகளின் மூத்த பேராசிரியர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூறப்படுவதாவது: பதவி நீட்டிப்பை வழங்கி மனிதவள அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதம் என்றும், அது மத்திய பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்றும் UGC கருதியது. மேலும், இதுதொடர்பாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. மத்தியப் பல்கலைக்கழக சட்டத்தின்படி, முதன்முதலாக துணைவேந்தர் பணியில் அமர்வோர், 5 ஆண்டுகளைத் தாண்டி, பணி நீட்டிப்பு பெறமாட்டார்கள் என்பது விதி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: தேவை அற்றதை நீக்குங்கள்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: தேவை அற்றதை நீக்குங்கள்: குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக்கொண்டுகாட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி அவற்றை ஏதாவது ஒரு வகையில் இ...

ஞாயிறு, 2 மார்ச், 2014

02 Mar, 2014 4:25p.m. This article is based on the media report quoted below. Reader discretion is advised. A report from the Times of India The government has also cleared the way for merger of 50% DA with basic pay by approving it among the terms of reference of the 7th Pay Commission. An official said now the commission can suggest the merger in its interim report. He added that 50% DA merger with basic pay will roughly increase the gross salaries of central government employees by around 30%. Source : http://timesofindia.indiati mes.com/india/Cabinet- hikes-DA-to- 100-salary- may-increase- by-30/articleshow /31190916.cms

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: 66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்...

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: 66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்...: 66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்          &qu...

66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்


         "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகும்'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.

தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட, முக்கிய புள்ளி விவரங்கள்:
 
          தமிழ் வழியில், தேர்வை எழுதும், 5,45,771 மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.விடைத்தாள் முதல் பக்கம், புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில், மாணவர் புகைப்படம், பதிவு எண், தேர்வுப் பாடம், தேதி உள்ளிட்ட, அனைத்து விவரங்களும் இருக்கும். மாணவர், வெறும், கையெழுத்து மட்டும் போட்டால் போதும்.
 
வினாத்தாள் கட்டு
ஒரு அறையில், 20 மாணவர் வீதம், தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும், இரு மாணவரிடம், கையெழுத்து பெற்றபின், அவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்.
வினாத்தாளை, படித்துப் பார்க்க, 10 நிமிடமும், விடைத்தாள் முதல் பக்கத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்க, 5 நிமிடமும் வழங்கப்படும். எனவே, விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, பகல், 1:15க்கு 
முடிவடையும்.

ரத்து செய்யப்படும் 
 
        தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் நடந்தால், அதற்கு, பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும் தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும், கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.விடைத்தாள் கட்டுகளை, அஞ்சல் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், கார்கள் மூலமாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
தடையற்ற மின்சாரம் 
 
          தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்க, மின்சார வாரியம் மூலம், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ளவும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு 
உள்ளது.
 
          "பிட்' வைத்திருத்தல், "பிட்'டை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம், முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடுமையான குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் அடிப்படையில், உரிய தண்டனை
வழங்கப்படும்.
 
         கடந்த தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 397 மாணவர்கள், தண்டனை பெற்றுள்ளனர். எனவே, மாணவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு, எதிர்காலத்தை, பாழாக்கிக்கொள்ளக் கூடாது. விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்ளில் நடக்கும். தேர்வு முடிவுகள், மே, முதல் வாரத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.