திங்கள், 3 மார்ச், 2014

TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது
மூன்று நபர் குழு விசாரணை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் 1. AGRICULTURE DEPARTMENT 2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT 3. ANIMAL HUSBANDRY DEPARTMEN 4 .FISHERIES DEPARTMENT. 5. HIGHWAYS DEPARTMENT 6. RURAL DEVELOPMENT DEPARTMENT 7. INDUSTRIES AND COMMERCE DEPARTMENT 8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT 9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT 10 MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT 11. SERICULTURE DEPARTMENT 12. PUBLIC WORKS DEPARTMEN 13. STATE TRANSPORT AUTHORIT 14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT 15. TOWN PANCHAYA 16. ELECTRICAL INSPECTORAT 17.I CHENNAI CORPORATION 18. REVENUE DEPARTMENT 19. POLICE DEPARTMEN 20. FOREST DEPARTMENT
தனது முடிவை அவசரமாக திரும்பப் பெற்ற மனிதவள அமைச்சகம் மொத்தம் 12 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை, மத்திய மனிதவள அமைச்சகம் அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள், தங்களின் பொறுப்புகளை, அந்தந்த பல்கலைகளின் மூத்த பேராசிரியர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூறப்படுவதாவது: பதவி நீட்டிப்பை வழங்கி மனிதவள அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதம் என்றும், அது மத்திய பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்றும் UGC கருதியது. மேலும், இதுதொடர்பாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. மத்தியப் பல்கலைக்கழக சட்டத்தின்படி, முதன்முதலாக துணைவேந்தர் பணியில் அமர்வோர், 5 ஆண்டுகளைத் தாண்டி, பணி நீட்டிப்பு பெறமாட்டார்கள் என்பது விதி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: தேவை அற்றதை நீக்குங்கள்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: தேவை அற்றதை நீக்குங்கள்: குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக்கொண்டுகாட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி அவற்றை ஏதாவது ஒரு வகையில் இ...

ஞாயிறு, 2 மார்ச், 2014

02 Mar, 2014 4:25p.m. This article is based on the media report quoted below. Reader discretion is advised. A report from the Times of India The government has also cleared the way for merger of 50% DA with basic pay by approving it among the terms of reference of the 7th Pay Commission. An official said now the commission can suggest the merger in its interim report. He added that 50% DA merger with basic pay will roughly increase the gross salaries of central government employees by around 30%. Source : http://timesofindia.indiati mes.com/india/Cabinet- hikes-DA-to- 100-salary- may-increase- by-30/articleshow /31190916.cms

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: 66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்...

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெருந்துறை: 66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்...: 66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்          &qu...

66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்


         "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகும்'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.

தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட, முக்கிய புள்ளி விவரங்கள்:
 
          தமிழ் வழியில், தேர்வை எழுதும், 5,45,771 மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.விடைத்தாள் முதல் பக்கம், புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில், மாணவர் புகைப்படம், பதிவு எண், தேர்வுப் பாடம், தேதி உள்ளிட்ட, அனைத்து விவரங்களும் இருக்கும். மாணவர், வெறும், கையெழுத்து மட்டும் போட்டால் போதும்.
 
வினாத்தாள் கட்டு
ஒரு அறையில், 20 மாணவர் வீதம், தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும், இரு மாணவரிடம், கையெழுத்து பெற்றபின், அவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்.
வினாத்தாளை, படித்துப் பார்க்க, 10 நிமிடமும், விடைத்தாள் முதல் பக்கத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்க, 5 நிமிடமும் வழங்கப்படும். எனவே, விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, பகல், 1:15க்கு 
முடிவடையும்.

ரத்து செய்யப்படும் 
 
        தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் நடந்தால், அதற்கு, பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும் தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும், கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.விடைத்தாள் கட்டுகளை, அஞ்சல் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், கார்கள் மூலமாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
தடையற்ற மின்சாரம் 
 
          தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்க, மின்சார வாரியம் மூலம், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ளவும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு 
உள்ளது.
 
          "பிட்' வைத்திருத்தல், "பிட்'டை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம், முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடுமையான குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் அடிப்படையில், உரிய தண்டனை
வழங்கப்படும்.
 
         கடந்த தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 397 மாணவர்கள், தண்டனை பெற்றுள்ளனர். எனவே, மாணவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு, எதிர்காலத்தை, பாழாக்கிக்கொள்ளக் கூடாது. விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்ளில் நடக்கும். தேர்வு முடிவுகள், மே, முதல் வாரத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரை

          துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற உயர்நிலை/மேல்நிலை தலைமை ஆசிரியர்களை மட்டுமே மாவட்ட கல்வி அலுவலர் தேர்ந்தோர் பட்டியலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் -பள்ளிகல்வி இயக்குனர்

 


அஞ்சல் துறைக்கு "டாட்டா;' வாடகை கார்களுக்கு "ஜாக்பாட்!' : தேர்வை நடத்த ரூ.30 கோடி செலவு

           ஒன்றரை மாதம் நடக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், வினாத்தாள் மற்றும் விடைத்தாளை கொண்டு செல்லும் பணியில், வாடகை கார்கள் பயன்படுத்துவதால், அவர்களுக்கு, தொடர்ச்சியாக வேலை கிடைத்துள்ளது. தேர்வை நடத்த, 30 கோடி ரூபாயை, தேர்வுத் துறை செலவழிக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில், அஞ்சல் துறையை, தேர்வுத் துறை பயன்படுத்தியது. கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், இரு விடைத்தாள் கட்டுகளை, தபால் துறை ஊழியர், பஸ்சில் எடுத்துச்சென்று, தவற விட்ட விவகாரம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

           அஞ்சல் துறையின் மெத்தனம் : அதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், ரயிலில் எடுத்துச்சென்ற விடைத்தாள் கட்டுகள், கீழே விழுந்து சேதம் அடைந்தன. அஞ்சல் துறையின் மெத்தனத்தால், இந்த இரு சம்பவங்களும் நடந்ததாக, தேர்வுத் துறை குற்றம் சாட்டியது. இதன் காரணமாக, இந்த ஆண்டு, வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில், அஞ்சல் துறையை ஈடுபடுத்தவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும், வாடகை கார்களை பயன்படுத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையத்திற்கு, வினாத்தாள் கட்டுகளை கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு முடிந்தபின், விடைத்தாள் கட்டுகளை, விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில், வாடகை கார்கள் பயன்படுத்தப்படும். நான்கு, ஐந்து மையங்களுக்கு சேர்த்து, ஒரு கார் என்ற வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை துவங்கி, ஏப்ரல், 9ம் தேதி வரை, தொடர்ந்து, வாடகை கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், ஒன்றரை மாதம் வரை, வாடகை கார் வைத்திருப்பவர்களுக்கு, வேலை கிடைத்துள்ளது. காரில், ஒரு போலீஸ்காரர், முதுகலை ஆசிரியர் நிலையில், ஒரு வழித்தட அலுவலர் இருப்பர்.

                    ரூ.30 கோடி செலவு : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. மொழிப்பாட தேர்வுகளின் போது, ஒரு லட்சம் பேரும், இதர பாட தேர்வுகளின்போது, 60 ஆயிரம் பேர் வரையும், தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு அலுவலரின் நிலைக்கு ஏற்ப, தேர்வுப்படி வழங்கப் படுகிறது.

தேர்வு புகார்களை பெற "கன்ட்ரோல் - ரூம்' அமைப்பு

              பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், "கன்ட்ரோல் - ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, நாளை, 3ல் துவங்கி, 25 வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு, 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது. 
 
               தேர்வு தொடர்பான தகவல்கள்,புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள், உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், "கன்ட்ரோல் - ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது. காலை, 8:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள், தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு நாளை ஆரம்பம் : 8.26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


                தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்குகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத் துறை, முழுவீச்சில் செய்து முடித்து, தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில், 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 8.12 லட்சம் மாணவர்கள், 2,210 மையங்களில், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 3 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர்; மாணவியர், 4 லட்சத்து 38 ஆயிரத்து 392 பேர். புதுச்சேரி மாநிலத்தில், 120 பள்ளிகளில் இருந்து, 13 ஆயிரத்து, 528 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 6,091 பேர் மாணவர்; 7,437 பேர் மாணவியர். 32 மையங்களில் தேர்வு நடக்கின்றன. தமிழகம், புதுச்சேரி இரண்டிலும் சேர்த்து, 8.26 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதுகின்றனர். 2,242 மையங்களில், தேர்வு நடக்கின்றன. கடந்த ஆண்டை விட, மாணவர், 8,838 பேரும், மாணவியர், 17,766 பேரும், கூடுதலாக எழுதுகின்றனர்.

          சிறைவாசிகள் 58 பேர் : பள்ளி மாணவர்களுடன், தனித் தேர்வு மாணவர்கள், 53,629 பேரும், தேர்வை எழுதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சிறைவாசிகள், சிறையிலேயே தேர்வெழுத, அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு, சென்னை, புழல் சிறையில், 58 பேர், பிளஸ் 2 தேர்வை, தனித் தேர்வாக எழுதுகின்றனர்.

            சிறப்பு மாணவர் நரம்பு சம்பந்தமான குறைபாடு உள்ள மாணவர், காது கேளாதோர், பார்வையற்றோர், பேச முடியாதோர் மற்றும் இதர உடல் குறைபாடு உடைய மாணவ, மாணவியர், 1,000 பேர், தேர்வை 
எழுதுகின் றனர். இவர்களுக்கு, மொழிப்பாடம் விலக்கு அளிப்பதுடன், தேர்வு நேரம், கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது. மேலும், இவர்கள், தரை தளத்தில் தேர்வு எழுதும் வகையில், தேர்வுத் துறை 
ஏற்பாடு செய்துள்ளது. 

            பறக்கும் படை : மாநிலம் முழுவதும், 4,000 உறுப்பினர்கள் அடங்கிய, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அடங்கிய ஒரு குழுவும், கணிதம், அறிவியல் போன்ற, முக்கிய பாடத் தேர்வுகளின்போது, அண்ணா பல்கலை ஆசிரியர் அடங்கிய குழு, மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழு உட்பட, பல்வேறு பறக்கும் படை குழுக்களும், தேர்வு மையங்களை பார்வையிட உள்ளன.

            இயக்குனர் பேட்டி : தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறியதாவது: அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையங்களுக்கு, வினாத்தாளை, பாதுகாப்பாக கொண்டு செல்லவும், தேர்வு முடிந்த பின், விடைத்தாள் கட்டுகளை, குறிப்பிட்ட மையத்திற்கு கொண்டு செல்லவும், வாடகை கார்கள் மூலம், உரிய ஏற்பாடுகள் 
செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட, அனைத்து அடிப்படை வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வை, எவ்வித புகாருக்கும் இடமின்றி, சுமுகமாக நடத்துவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, தேவராஜன் கூறினார்.

TET NEWS - உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடத்துக்கு மவுசு : ஆசிரியர் தகுதி தேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி


           ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.

           ஆசிரியர் பணி : தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம், 2010 ஆகஸ்ட் முதல் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே நியமிக்க முடியும். இதன் அடிப்படையில், 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வெழுதினாலும், 20 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே, உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்பதால், காலியாக இருந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் பணி கிடைத்ததால், உதவி பெறும் பள்ளி களில் வேலைவாய்ப்பை பெற யாரும் ஆர்வம் காட்டவில்லை.

              47 ஆயிரம் பேர் தேர்ச்சி : பெரும்பாலான உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க முடியாமல், இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்தன. கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வு முடிவில், 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனத்துக்கு தயாராகும் நிலையில், தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால், கூடுதலாக, 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஆனால், அரசு பள்ளிகளில் அதிக பட்சம், 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும் என்பதால், மீதமுள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நடப்பு ஆண்டில் அரசு பணி கிடைக்க வாய்ப்பில்லை. அதே போல், அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்வு நடத்தி, அதன் பின் கிடைக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முன்னுரிமையில், பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலை கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவர்களின் பார்வை, தற்போது உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகம் அடைந்து உள்ளன. ஆசிரியர் பணியிடங்களுக்கு நிர்ணயித்திருந்த, "விலை'யையும், உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

               இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கிடைக்காமல், உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. புகார் தற்போது, அளவுக்கதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டாத, பல பள்ளி நிர்வாகத்தினர், தற்போது அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றன. அதே போல், ஒரு ஆசிரியர் பணியிடம் நிரப்ப, பல லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, தற்போதே புகாரும் வரத்துவங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

 

           தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் : பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

          தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் : பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

            தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட விவரங்கள்  தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் நடந்தால், அதற்கு, பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும் என இயக்குனர் தெரிவித்தார்

           தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும், கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.விடைத்தாள் கட்டுகளை, அஞ்சல் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், கார்கள்மூலமாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தடையற்ற மின்சாரம்தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்க, மின்சார வாரியம் மூலம், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனினும், ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ளவும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

                "பிட்' வைத்திருத்தல், "பிட்'டை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம், முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடுமையான குற்றங்களாகும்.  இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் அடிப்படையில், உரிய தண்டனை  வழங்கப்படும்.கடந்த தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 397 மாணவர்கள், தண்டனை பெற்றுள்ளனர். எனவே,.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும் தகுந்த பென்ஷன் உண்டு


            உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும், அதற்குரிய பென்ஷனை தான் வழங்க வேண்டும்' என, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டது செகந்தராபாத், பிருந்தாவன் காலனியை சேர்ந்த கிருஷ்ணாராவ், சென்னையிலுள்ள ராணுவ தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு.. 

           கடந்த, 1964ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தேன். 1985, ஜூன் மாதம், ஜூனியர் வாரன்ட் ஆபீசராக, பதவி உயர்வு பெற்றேன். அதே ஆண்டு, ஆக., 31ல், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். விமானப் படையில், 21 ஆண்டு பணியாற்றியுள்ளேன். என் புதிய பதவி சம்பள அடிப்படையில் தான், எனக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தேன்.
 
           ஆனால், உயர் பதவி பெறுபவர்கள், குறைந்தது, இரண்டு ஆண்டுகள் வரை, பணியில் இருந்தால் தான், உயர் பதவி பென்ஷன் வழங்கப்படும். அதற்கு, குறைந்த நாட்கள் பணியாற்றினால், ஏற்கனவே பணியில் இருந்த, பதவியின் சம்பள அடிப்படையில் தான், பென்ஷன் வழங்கப்படும் என, ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்கு உயர்பதவி அடிப் படையிலான, பென்ஷன் வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை, ராணுவ தீர்ப்பாய தலைவர், நீதிபதி பெரிய கருப்பையா அடங்கிய அமர்வு விசாரித்து, மனுதாரருக்கு ஜூனியர் வாரன்ட் ஆபீசர் நிலையில், பென்ஷன் வழங்க வேண்டும் என்று, இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

சனி, 1 மார்ச், 2014

தேவை அற்றதை நீக்குங்கள்

குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக்கொண்டுகாட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி அவற்றை ஏதாவது ஒரு வகையில் இல்லாமல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். முதல் சீடன் உடனே ஒரு மண்வெட்டியை எடுத்து பக்கத்தில் ஒரு பெரும் பள்ளம் வெட்டி, அதனுள் அந்தப் பாறையைத் தள்ளி அதன்மேல் மண்ணைப் போட்டு மூடினான். இரண்டாம் சீடன் ஒரு சுத்தியலை எடுத்து, பாறையைத் தூள் தூளாக நொறுக்கினான். மூன்றாவது சீடன் ஓர் உளியை எடுத்து, பாறையில் ஓர் அழகான சிற்பம் வடித்தான். ஆக மூன்று பேரும் அந்தப் பாறையை இல்லாமல் செய்துவிட்டனர்.முதல் சீடன் செய்தது மறைத்தல். இரண்டாமவன் செய்தது அழித்தல். மூன்றாம் சீடன் செய்தது ஆக்கல். ஆக, மூன்றாம் சீடனின் செய்கையே சிறந்தது எனப் பாராட்டிய குருநாதர், மேலும் ஓர் உபதேசமும் அதில் அடங்கி இருப்பதாகக் கூறினார். அதாவது, அவன் அந்தச் சிற்பத்தை உருவாக்கும்பொழுது புதிதாக சிற்பத்தை எங்கிருந்தோ உருவாக்கவில்லை.அந்தப் பாறையிலிருந்து தேவையற்ற பகுதியை நீக்கினான். அவ்வளவுதான்! அதேபோல் நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை நீக்கிவிட்டோமானால், நம்மில் ஒரு சிறந்த மனிதனைக் காணலாம்.

No DA Merger, No increase in Retirement Age but Interim Relief on the cards

No DA Merger, No increase in Retirement Age but Interim Relief on the cards – Postal Inspectors Association All India Association of Inspectors and Assistant Superintendents Posts (AIAIASP), in its website has come up with an information to the effect that since Merger of DA with Basic Pay and increasing Retirement Age may not be possible before General Elections, Cabinet did not take these two proposals in to consideration. All India Postal Inspectors Association has also informed that instead of DA Merger and Raising Retirement Age to 62, there are possibilities of announcing Interim Relief to Central Government Employees and Pensioners by Government before General Elections Here is the extract of Interim Relief News published in All India Postal Inspectors Website Proposals of Enhancement of Retirement age and Merger of D.A may not materialize It was learnt from the sources close to the Union Government that the proposals of Enhancement of Retirement age of Central Government Employees from 60 to 62 years and Merger of D.A to basic pay may not be materialized now before General elections. Accordingly, these two proposals have not been taken up for consideration by the union Cabinet in its meeting held on friday. But there is possibility to announce Interim Relief (I.R) before elections.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி?

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியைஅடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது?இம்முடிவால்50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள். மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும். யூரியாவுக்கான உற்பத்தி விலையை டன்னுக்கு 350 ரூபாய் அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது.follow on.twitter.com/tngtfperundurai

புதன், 26 பிப்ரவரி, 2014

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான திறனாய்வுத்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகம் முழுவதும் 520 மையங்களில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர். இதன் ரிசல்ட் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்கு நர் கே.தேவராஜனிடம் கேட்டபோது, ‘‘விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. அனைத்து மாவட்டங்க ளில் இருந்தும் வந்த பிறகு, கணினியில் மதிப்பீட்டு பணி கள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை 3 வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார். பிப்ரவரி 26ம் தேதிக்கு பின் நடக்கவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் 10% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஒய்வு வயதை 62ஆக உயர்த்தும் கோரிக்கையும் பரிசீலினையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கு முன்னரே மேற்காணும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பல்வேறு அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

*பிப்ரவரி 25 நிகழ்வுகள்* *********************** 1797 - வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர். 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கானஅமெரிக்கக் காப்புரிமத்தைப்பெற்றார். 1837 - தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப்பெற்றார். 1921 - ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 1925 - சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. 1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார். 1945 - இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது. 1948 - செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. 1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார். 1980 - சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. 1986 - பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார். 1988 - மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது. 1991 - வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவுதி அரேபியாவின் டாஹ்ரான் நரைல் அமெரிக்க இரணுவத்தளத்தில்வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1992 - அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர். 1994 - மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும்9 இஸ்ரேலியர்களும்கொல்லப்பட்டனர். 2006 - உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது. 2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது. பிறப்புகள்[தொகு] 1915 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006) 1982 - தனுஷ், தமிழ்த் திரைப்பட நடிகர். இறப்புகள்[தொகு] 1950 - ஜோர்ஜ் மினோட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1885) 1971 - தியோடர் சிவெட்பேர்க், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (பி. 1884) 1999 - கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1912) 2001 - சேர் டொனால்ட் பிறட்மன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் (பி. 1908) 2004 - நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர்,(பி. 1912) சிறப்பு நாள்[தொகு] குவெய்த் - தேசிய நாள் பிலிப்பைன்ஸ் - மக்கள் எழுச்சி நாள் (1986)