செவ்வாய், 28 ஜனவரி, 2014

TET நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குவர இயலாதவர்களுக்குஒரு வாய்ப்பளிக்கும்வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும்வகையில்நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குவருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்குஇதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும்,இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
good evening

பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்| சிந்தனை கதைகள்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்

வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்

மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.

நாம் ஒவொருவரும் இப்படி தன பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு

பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி | தமிழ் அறிவு கதைகள்

காலச் சுவடுகள் சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் (ஜன.28- 1882)

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதேநாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1820 - பாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது. 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர். 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர். 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். 1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர். 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73-வது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர். 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

Today's main headlines: 1. Modi Government Abetted, Pushed 2002 Riots: Rahul - http://tnie.in/ 1fhYfpO2. India to Review Gold Import Curbs by March End: Chidambaram - http://tnie.in/ 1fhYlxR3. India Eyes FDI in Railways - http://tnie.in/ 1f2BNAl4. Andaman Tragedy: Shaken Survivors Refuse Stretchers, Families Accompany in Mortuary Vans - http://tnie.in/ 1f2BYvv5. Telangana Ministers Protest Against Kiran Reddy in Andhra Assembly - http://tnie.in/ 1fhYscx


திங்கள், 27 ஜனவரி, 2014

ஹென்றி ஃபோர்ட் !!!
அமெரிக்க கோடீஸ்வரராக இருந்த ஹென்றி ஃபோர்டைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் வந்தார்.
“சார், உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே எப்படி?” என்று கேட்டார் இளைஞர்.
“முயற்சி செய்தால் நீ கூட சம்பாதித்து விடலாம்!” என்றார் ஹென்றி ஃபோர்ட்.
“என்னிடம் தொழில் தொடங்க அவ்வளவு பணம் இல்லை. ஒன்றும் இல்லாமல் எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று கவலையாக இருக்கிறேன்.”
“என்னிடம் இல்லாத மதிப்புமிக்க ஒரு விஷயம் உன்னிடம் இருக்கிறது. அதன் மூலம் எதையும் சாதிக்கலாம்!”
“அப்படி எதுவும் என்னிடம் இல்லையே?”
“இளமை என்ற ஒப்பற்ற விஷயம் இருக்கிறதே! நான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை விட உன்னால் பல மடங்கு இளமையை வைத்து சம்பாதிக்க இயலும். அந்த இளமையை எனக்குக் கொடுக்கிறாயா? என் சொத்தை எழுதித் தருகிறேன்” என்று கேட்டார் ஹென்றி ஃபோர்ட்.
இளைஞர் நம்பிக்கையுடன் கிளம்பினார் !!

நீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்! ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்…. அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை! எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர். பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர். பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். நன்றி தினமணி! புகைப்படம்: நீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்! ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்…. அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை! எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர். பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர். பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். நன்றி தினமணி!

நீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்!
ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.
ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.
அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால்,
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.
நன்றி தினமணி!

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):

அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.

பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்.

நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.

சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை - தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

சுப்ரமணியம், செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம்.

பதவி உயர்வு:

சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.மனோகரனுக்கு, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அந்தஸ்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

good night



welcome


welcome to tngtf perundurai